வாட்ஸ் அப்பின் பயன்பாடு குறித்து நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், வீடியோ கால் என நிறைய வசதிகள் உண்டு. ஆனால், இந்த செயலியில் சமீபத்தில் சேனல் உருவாக்கும் முறையைக் கொண்டுவந்தார்கள். இந்த வாட்ஸ்அப் சேனல் வசதியில், எழுத்து வடிவ மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை அட்மின் ஒருவர் பிற உறுப்பினர்களுக்கு அனுப்புவார்.
குறிப்பாக, இது ஒரு வழி ஒளிபரப்பு கருவியாகும். தற்போது இந்த வாட்ஸ் அப் சேனலில் இந்தியப் பிரதமர் மோடி இணைந்து மக்களிடம் நேரடியாகத் தொடர்பில் இருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. எனவே, வாட்ஸ்அப் பயனர்கள் அனைத்து அப்டேட்களையும் இனிமேல் பிரதமரிடமிருந்து நேரடி மெசேஜ் மூலம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அவர் வாட்ஸ்அப் சேனலில் இன்று செவ்வாய்க்கிழமை(19-09-2023) இணைந்துள்ளார். இது குறித்து மோடி தனது வாட்ஸ்அப் சசேனலில், “வாட்ஸ்அப் சமூகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நமது தொடர்ச்சியான உரையாடலின் பயணத்தில் இன்னும் ஒரு படி நெருக்கமாக மாறியுள்ளது. இந்த சேனலில் இணைந்திருப்போம்! இதோ புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் புகைப்படம்..” எனப் பதிவிட்டிருந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முதலில் ட்விட்டர் கணக்கை தொடங்கினார். அவர்தான் இந்தியாவில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய முதல் முதலமைச்சர் என்று கூறப்படும் நிலையில், தற்போது பிரதமர் மோடி வாட்ஸ் ஆப் சேனலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் https://www.whatsapp.com/channel/0029Va8IaebCMY0C8oOkQT1F - இதனைப் பயன்படுத்தி மோடி அவர்களின் சேனலில் இணைந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.