ஆவடி காவல் ஆணையராக எல்லைக்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பட்டாபிராம் ஆயில்ச்சேரி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான இரட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பட்டாபிராம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசாருக்கு காவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.