பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் ஐந்து நாள் பயணமாக மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்கிறார்.
ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு செல்லும் மோடி, இன்று இந்தியாவில் இருந்து புறப்படுகிறார். இதில் முதல் பயணமாக ருவாண்டா நாட்டிற்கு செல்கிறார். இந்திய பிரதமராக முதன்முதலில் ரூவாண்டாவுக்கு செல்பவர் மோடிதான். ரூவாண்டாவுக்கு சென்றபின், கிகாலி இனப்படுகொலை நடந்த நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவிட்டு, பின்னர் 24 உகாண்டா சென்று 25ஆம் தேதி வரை தங்குகிறார். அப்போது உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்ற போகும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெருகிறார்.
பின்னர் 25 ஆம் தேதி தென்னாப்ரிக்காவுக்கு சென்று, அங்கு நடக்க இருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இந்த ஐந்து நாள் ஆப்பிரிக்க பயணத்தில் மோடி மூன்று அதிபர்களை தனித்தனியாக சந்தித்து இந்தியாவுடனான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அங்கிருக்கும் இந்திய சமூகத்தினரிடமும் பிரதமர் மோடி கலந்துரையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.