Skip to main content

"எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்" -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

pm narendra modi speech at gujarat

 

 

நாடு முழுவதும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் இன்று (31/10/2020) கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை நாட்டின் நலன் கருதி தவிர்க்க வேண்டும். புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்பு படையினர் செய்த தியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்தனர். பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது. ஒற்றுமையின் புதிய கோணத்தை இந்தியா உருவாக்குகிறது. காஷ்மீர் வளர்ச்சியின் பாதையில் செல்லும் நிலையில், வடகிழக்கு பகுதியில் அமைதி, வளர்ச்சி ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒரே இந்தியா கனவை நிறைவேற்ற பாஜக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்