ராஜ் தாக்கரேயின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் பெட்ரோல் விலை ரூ.9 வரை குறைவாக விற்கப்பட்டது.
மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா என்ற கட்சியைச் சேர்ந்தவர் ராஜ் தாக்கரே. இக்கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே இன்று தனது 50ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். தனது பிறந்த தினத்தை மற்றவர்களும் சிறப்பாக கொண்டாட, இன்று காலை சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது பிறந்த தினமான இன்று மக்களை மகிழ்விக்கும் வகையில் காலை முதல் மதியம் வரை பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலை ரூ.9 வரை குறைத்து விற்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெகுவிரைவில் பரவ, மக்கள் பெட்ரோல் நிலையங்களை முற்றுகையிட்டனர். சில பெட்ரோல் நிலையங்களில் மட்டும் ரூ.4 முதல் ரூ.9 வரை பெட்ரோல் விலை குறைத்து விற்பனை செய்யப்பட, அதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு ஏற்படும் இழப்பை தாமே சரிசெய்து கொள்வதாகவும் ராஜ் தாக்கரே அறிவித்திருந்தார்.
இதனால், ரூ.84க்கு விற்கப்படும் பெட்ரோல் ரூ.75 வரை குறைத்து விற்கப்பட்டது. இதனைக் கண்காணிக்க ராஜ் தாக்கரேயின் ஆதரவாளர்களும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.