Skip to main content

பெண்கள் பள்ளி அருகே மதுபானக் கடை அமைக்க அனுமதியளித்த கலால்துறை! போராட்டத்தில் இறங்கிய பல்வேறு அமைப்பினர்!!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
Permit to set up liquor store near girls school! Various organizations that went down in the struggle

 

புதுச்சேரியிலுள்ள பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் சுப்பரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இதற்கு அருகில் புதிதாக மதுபானக் கடை அமைக்க கலால்துறை அனுமதியளித்துள்ளது. பெண்கள் பள்ளி அருகே மதுபானக் கடை அமைக்க அனுமதியளித்த கலால் துறையைக் கண்டித்தும், அந்த மதுபானக் கடையை அகற்றக் கோரியும்  இன்று (25.06.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழர்களம் மாநில அமைப்பாளர் கோ. அழகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ. சுகுமாரன், திராவிடர் கழகம் சிவ. வீரமணி, மீனவர் விடுதலை வேங்கைகள் நா. மலையாளத்தான், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மு. நாராயணசாமி, புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை ஆ. பாவாடைராயன், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் இரா. முருகானந்தம், நகர தலித் பாதுகாப்பு இயக்கம் பெ. பிரகாஷ், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம் புதுவை தமிழ்நெஞ்சன், தமிழ்தேசிய பேரியக்கம் இரா. வேலுச்சாமி, இந்திய தேசிய இளைஞர் முன்னணி பு. கலைப்பிரியன் தமிழர்களம் நகரமன்றச் செயலாளர் சதிஷ் மற்றும் அமைப்பினர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கலால் துறை ஆணையரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்