Skip to main content

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனையை அறிவித்த மத்திய அரசு!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இந்த மசோதாவில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு ரூபாய் 25,000 அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் மசோதா உருவாக்கப்ட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினாலோ, மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டினாலோ, அளவுக்கு அதிக சரக்குகளை வாகனத்தில் ஏற்றி பயணித்தாலோ அவர்களுக்கான அபராத தொகையை சுமார் 10 மடங்கு அதிகரித்து மோட்டார் வாகனச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு கடுமையான விதிமுறைகளை அமல்ப்படுத்தவுள்ளது.

 

 

two wheelers and four wheelers did not drive child

 

 

அதே போல் குறைந்தப்பட்ச அபராத தொகையாக ரூபாய் 1,000 ஆக உயர்த்தியது. வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5,000 அபராதமும், மருத்துவ ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்கினால் ரூபாய் 10,000 என மோட்டார் வாகனச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு கடுமையான விதிகளை சட்டத்தில் இணைத்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் அதிக அளவில் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவே மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் கடுமையான விதிகளை உருவாக்கி அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இதனால் சாலை விபத்துக்கள் பெருமளவில் குறையும் என தெரிவித்துள்ளார். இந்த சட்டம் நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்