Published on 28/01/2021 | Edited on 28/01/2021
![delhi locals](http://image.nakkheeran.in/cdn/farfuture/SUnw9TJJ4527lB8lyR4Ev2z462o7_L98TiDuYUdRy_o/1611825618/sites/default/files/inline-images/pro-im.jpg)
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, குடியரசுத் தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயிகள் விதிகளைப் பின்பற்றாததே வன்முறைக்கு காரணம் என டெல்லி காவல்துறையும், இது விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான மத்திய அரசின் சதி என்று விவசாய சங்கத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த வன்முறை காரணமாக 20க்கும் மேற்பட்ட வழக்குககள் பதிவு செய்யப்பட்டு, விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு எதிராக திடீர் போராட்டம் வெடித்துள்ளது. தங்களை உள்ளூர் மக்கள் என கூறிக்கொள்ளும் சிலர், சிங்கு எல்லையில் திரண்டு, அங்கிருக்கும் விவசாயிகள் வெளியேற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.