![vcbvnvbn](http://image.nakkheeran.in/cdn/farfuture/fsNthMIXfr_VNKfIewE7CwJHCX06RWGtX6eAj8n7mXQ/1550485208/sites/default/files/inline-images/Pulwama_Attack_feb17-std.jpg)
புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று இரவு பூஞ்ச் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதற்கு இந்தியா சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பேருந்து சேவைகள் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இன்று காலை தீவிரவாதிகளுடன் நடைபெக்டர் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 3 தீவிரவாதிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.