காஷ்மீரில் பாக் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில்: இந்திய வீரர் உயிரிழந்தார்
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர் உயிரிழந்தார். காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட்பல்னோயி செக்டாரில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார் பெயர் பவான் சிங் என தெரிவிக்கப்பட்டுள்ளது.