இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தை இயக்கிய நெல் வியாபாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, தவளக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (65). நெல் வியாபாரம் செய்து வந்த வேணுகோபால் இன்று இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் அவரது இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் தீ அவர் மீதும் பரவியது. சம்பவ இடத்திலேயே நெல் வியாபாரி வேணுகோபால் உயிரிழந்தார். இது குறித்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வேணுகோபாலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.