நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 150 வார்டுகளைக் கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்களர்கள் உள்ளனர். 1,122 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 9,101 வாக்குச்சாவடிகளில் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. டி.ஆர்.எஸ். 150, பா.ஜ.க. 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 106, ஓவைசியின் AIMIM 51 இடங்களில் போட்டியிடுகின்றன.
ஐதராபாத் மாநகராட்சியைக் கைப்பற்ற முதல்வர் சந்திரசேகரராவின் ஆளும் டி.ஆர்.எஸ். மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 4- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் காரணமாக வாக்குச்சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.