தாய்லாந்து வளைகுடா பகுதியில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு பபுக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பபுக் புயல் அந்தமானுக்கு கிழக்கு தென்கிழக்கே 720கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடலை நோக்கி 10கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பபுக் புயல் நாளை அந்தமான் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் பலத்த காற்றும், மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசம் என்றம் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதை தொடர்ந்து அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.