Published on 22/08/2020 | Edited on 22/08/2020

டெல்லியில் கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், பொதுமக்களைக் கடந்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என முன் களப்பணியாளர்களை அதிகளவில் தாக்கி வருகிறது. அந்தவகையில் டெல்லியில் 30-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு டெல்லி மஞ்சு-கா-டில்லா பகுதியில் கரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, அவரின் குடும்பத்திற்கான உதவித்தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலையையும் வழங்கினார்.