ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாகவும், மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் கடந்த திங்கள்கிழமை காலை மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார்.
அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்தார். அமித்ஷாவின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இந்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெற்ற நிலையில், ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அரசாணையில், திருத்தி அமைக்கப்பட்ட 370 ஆவது சட்டப்பிரிவும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவுகள் எதன் அடிப்படையில் நீக்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.