Published on 12/05/2021 | Edited on 12/05/2021
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட பணியை கைவிட வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் இந்த கடிதத்தை எழுதியுள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேவகவுடா, சரத்பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில்,'' புதிய நாடாளுமன்ற பணிக்கு ஒதுக்கிய நிதியை ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி வாங்க பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு முகாம்களை தொடங்க வேண்டும். வேலை இழந்தவர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளனர்.