Skip to main content

ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

OP Rabindranath's appeal in the Supreme Court

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், “ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தலின் போது அதிகார துஷ்பிரயோகம் செய்தல், வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்தல், வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்தல், வங்கிகளில் பெற்ற 10 கோடி ரூபாய் கடனை மறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தல், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, இது குறித்த புகாரை தேர்தல் அதிகாரிகள் வாங்க மறுத்தல், வாக்கு பெட்டியை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன” என பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட்டு இருந்தார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்திருந்தார்.

 

இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களில் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே வெற்றிபெற்றிருந்தார். அந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத்தை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்