கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்தியக் குழு.
"ஜூலை 12- ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியான நிலையில் அம்மாநிலத்திற்கு விரைகிறது மத்திய குழு. கேரள சுகாதாரத்துறைக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு அனுப்பி வைக்கப்படவுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை மத்தியக் குழு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.