
ராஜஸ்தான் மாநிலம், சுரு பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10ஆம் தேதி ஒரு இளைஞருடன் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதில் மனமுடைந்த மணபெண்ணின் தாத்தா தனது பேத்தியிடம் விசாரித்துள்ளார். அதில், சூரத் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது ஜீஷன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அந்த பெண்ணை மிரட்டி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தகாத உறவில் உட்படுத்தியுள்ளார்.
இதில் மனமுடைந்த பெண், ஜீஷன் தொடர்பை துண்டித்து வேறு ஒரு திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். ஆனாலும், வேறு எங்கும் திருமணம் செய்யக்கூடாது என்று ஜீஷன் பலமுறை போன் செய்து மிரட்டியுள்ளார். இந்த வேளையில் தான், மணமகனின் தந்தைக்கு அந்த ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த மணமகனின் பெற்றோர் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இளம்பெண், ஜீஷன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஜீஷன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.