இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வின் கேள்வி நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ பதிலளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று கேள்வி நேரத்தின்போது கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், "இந்தநாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசியை வழங்கவேண்டிய அவசியமில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாது. மேலும் அவர் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படுவதற்கு முன்பு, ஆய்வகத்திற்கு முந்தைய, ஆய்வகப் பரிசோதனைகள் உள்ளன. அதனை நிபுணர்கள் ஆய்வு செய்த பிறகே தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனவே, கரோனா தடுப்பூசிகள் குறித்து அச்சம் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.