கர்நாடகா மாநிலத்தில் பால் உற்பத்தி செய்யும் கூட்டுறவு அமைப்பானது நந்தினி என்ற பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் தனது சேவையை கர்நாடகாவில் விரைவில் தொடங்குவதாக அறிவித்து இருந்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தின் அமுல் பிராண்டுடன் கர்நாடகாவின் பால் கூட்டுறவுக்கு சொந்தமான 21,000 கோடி மதிப்பிலான நந்தினி பிராண்ட் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தில் நந்தினி பிராண்டை முன்வைத்துப் பேசி வருகின்றனர். இந்திய நிலையில், பெங்களூரில் உள்ள நந்தினி ஐஸ்கிரீம் மையத்திற்கு நண்பர்களுடன் சென்ற முன்னாள் எம்.பி ராகுல் காந்தி ஐஸ்கிரீமை சுவைத்தார். பின்னர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு 'கர்நாடகா பிரைட் - நந்தினி இஸ் தி பெஸ்ட்' என்று தெரிவித்துள்ளார்.
Karnataka’s Pride - NANDINI is the best! pic.twitter.com/Ndez8finup
— Rahul Gandhi (@RahulGandhi) April 16, 2023