Skip to main content

இரண்டாவது தலைநகர் - நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019


நாட்டின் தலைநகராக டெல்லி தற்போது திகழ்ந்து வருகிறது. நீதித் துறையின் மிக உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்டவை இங்குதான் அமைந்துள்ளன. இதனால், அரசு நிர்வாகம், வழக்கு தொடர்பான விஷயங்களுக்காக, ஜம்மு -காஷ்மீரில் இருந்து நாட்டின் கடைகோடி பகுதியான கன்னியாகுமரி வரையில் உள்ள குடிமகன்கள், ஏதாவதொரு கட்டத்தில் தலைநகர் டெல்லிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.



இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பணம், நேர விரயத்தை தவிர்க்கும் பொருட்டு, நாட்டில் இரண்டாவது தலைநகரம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் விதத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான டாக்டர் கே.வி.ராமசந்திர ராவ், "நாட்டிற்கு இரண்டாவது தலைநகரம் அவசியம் தேவை எனவும், அதனை தென்னிந்தியாவில் அமைக்கும் எண்ணம் உள்ளதா?" என கேள்வியெழுப்பினார். இதற்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், " நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. எனவே, இவ்வாறு கேள்வி எழுப்புவது தேவையற்றது" என அமைச்சர் பதிலளித்தார்.

 

சார்ந்த செய்திகள்