Skip to main content

சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ள நிர்பயா குற்றவாளிகள்...

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும் என நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அக்‌ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். 

 

Nirbhaya case convicts approach ICJ

 

 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்குத் தூக்கிலிடப்பட வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த மார்ச், 5 அன்று அறிவித்தது.  ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி மூன்றுமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டது. தற்போது அவர்களைத் தூக்கிலிடுவதற்காக நான்காவது முறையாகத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும் என அக்‌ஷய், பவன், வினய் ஆகிய குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவிப்பின்படி வரும் வெள்ளிக்கிழமை நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த முறையீட்டால் தேதியில் நான்காவது முறையாக மீண்டும் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்