இந்திய பிரதமர் மோடி, தனது 68 வது பிறந்தநாளை அவருடைய நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் கொண்டாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி செப்டம்பர் 17ஆம் தேதியில் பிறந்ததார். அன்று அவர் பிறந்த நாளையொட்டி, பாஜக கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளனர்.
செப் 17 அன்று வாரணாசியிலுள்ள ஒரு பள்ளிக்குச் சென்று, அப்பள்ளி மானவ மானவியர்களூடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க உள்ளார். அந்த வளர்ச்சித் திட்டங்களில், பல நல்ல கட்டிடங்களுக்கு அடிகல் நடுதல், ரிங் ரோடுகள் அமைத்தல் உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 600 கோடி செலவில் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனைக்கு அடிகல் நடுதல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னர், காசி விஸ்வநாதர் கொவிலுக்குச் சென்று ஆசி பெறுகிறார். இறுதியில் பனாரஸ் பழ்கலைக்கழகத்திற்குச் சென்று மானவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.