காஷ்மீரில் மாநில மக்களை மூன்று மாதங்களுக்கு மேலாக வீட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்து மத்திய பாஜக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில் இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குமுன்பே தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும் என்று தொடர்நது கூறுவது, ஒருவிதத்தில் நீதிமன்றத்தை மிரட்டுவதுபோல தோன்றுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவருகின்றன.
இந்நிலையில், அயோத்தி வழக்கில் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் அதை எங்களுடைய வெற்றியாக கொண்டாட மாட்டோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். 370 ஆவது பிரிவை ரத்து செய்தபோது அதை எங்களுடைய வெற்றியாக கொண்டாடினோமா? ஒரே நாடு என்ற சிந்தனையை உருவாக்குவதற்கான முயற்சியில்தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். சாதி அடிப்படையிலான வேறுபாடுகளையும் விரைவாக ஒழிப்போம் என்றார்கள்.