Published on 29/10/2020 | Edited on 29/10/2020
சமையல் எரிவாயு பெறுவதற்கான புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சமையல் எரிவாயு பெறுவதற்கு OTP அவசியம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி, நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டரை மொபைல் மூலம் பதிவு செய்யும்போது, அந்த எண்ணிற்கு OTP ஒன்று அனுப்பப்படும். பின்னர், சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்போது, விநியோகம் செய்யும் நபரிடம் அந்த OTP கொடுத்தால் மட்டுமே கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். முதற்கட்டமாக குறைந்த எண்ணிக்கையிலான நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டம், விரைவில் விரிவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.