பிரசாந்த் கிஷோர் யார் என மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி கேட்டதற்கு பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் டெல்லி தேர்தலுக்கான பாஜகவின் இணை பொறுப்பாளருமான ஹர்தீப் பூரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரசாந்த் கிஷோர் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, பிரசாந்த் கிஷோர் என்றால் யார்? என அவர் கேட்டார். அதற்கு, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் என அங்கிருந்தவர்கள் கூறினார். பின்னர் பேசிய அமைச்சர், அப்போது நான் இங்கு இல்லை. எனவே எங்கு பிரசாந்த் கிஷோரை தெரியாது என கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், "ஹர்தீப் பூரி ஒரு மூத்த அமைச்சர். என்னை ஏன் அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் ஏகப்பட்ட பேர் வாழ்கின்றனர். அமைச்சர் பூரி அவ்வளவு போரையும் எப்படி தெரிந்து வைத்துக்கொள்ள முடியும். எனவே, மத்திய அமைச்சருக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை" என தெரிவித்துள்ளார்.