தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் 200 ரூபாய் அபராதம். புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் ஒதுக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரி கடற்கரை 10 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். புதுச்சேரியில் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும். மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடவும், இரவு 8 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி அங்காடி நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.