Skip to main content

''புதிய கல்விக் கொள்கை தேச பக்தியை வளர்க்கும்''-ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"New education policy will develop patriotism in students"-RSS leader Mohan Bhagwat's speech

 

இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்அமைப்பின்  தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் விழா மேடையில் பேசுகையில், ''மதம் சார்ந்த சமமற்ற நிலையை தகர்ப்பதற்கு கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பூகோள ரீதியாக இருக்கும் எல்லை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை திட்டம் மாணவர்களை பண்பட்டவர்களாகவும் அதே நேரத்தில் தேச பக்தி கொண்டவர்களாகவும் மாற்றும் அதனால் புதிய கல்விக் கொள்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்