Published on 04/09/2020 | Edited on 04/09/2020

நீட் தேர்வுக்கு எதிராக ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஏழு மாநில அமைச்சர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று (04/09/2020) விசாரிக்கிறது.
செப்டம்பர் 13- ஆம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடக்க உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் மனுவை விசாரிக்கிறது.
இதனிடையே நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.