Published on 25/01/2019 | Edited on 25/01/2019

எதிர்வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் போட்டியிட வாய்ப்புள்ளதால், அப்படி பிரதமர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என உத்தரபிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தும் வகையில் பிரியங்கா காந்தி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரபிரதேச கிழக்குப்பகுதி நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தொண்டர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பின் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார் பிரியங்கா. மேலும் அவருக்கு உத்தரபிரதேசத்தில் அதிக செல்வாக்கு இருப்பதால் மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.