Skip to main content

ரூ. 2 கோடி கட்டிவிட்டு வெளிநாடு செல்லலாம் - கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

KARTI CHIDAMBARAM

 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில் கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இரண்டு கோடி ரூபாய் பிணைத்தொகையாக கட்டிவிட்டு வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம், தான் எங்கெங்கு செல்லவுள்ளார் என்பதையும், எங்கு தங்கவுள்ளார் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஏற்கனவே கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்