நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் 16ம் தேதி மாலை தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடி இருந்தது சர்ச்சையானதை தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டு பிறகு சரிசெய்யப்பட்ட பிறகு பதிவெற்றம் செய்யப்பட்டது. இதனால் இதுதொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. தேர்வு சரியாக நடத்தப்படவில்லை என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, "நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை, தவறான தகவல்களை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.