நீட் தேர்வில் வயது வரம்பைத் தளர்த்த வேண்டுமென சி.பி.எஸ்.இ (CBSE) பாடத்திட்டத்தில் படித்த பொதுப்பிரிவு மாணவர்கள் சி.பி.எஸ்.இ (CBSE) வரையறுத்த வயது வரம்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
நேற்று (23 பிப்ரவரி) விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே சி.பி.எஸ்.இ (CBSE) வரையறையின் படி நீட் தேர்வு எழுதும் மாணவரின் 17 முடிந்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது பொது பிரிவினருக்கு 25, பட்டியலினத்தவருக்கு 30 என வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 8-ஆம் தேதி முதல் வரும் மார்ச் 9-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 3-வது வாரத்தில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று வயது வரம்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெறும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வு எழுத வேண்டும். அதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ (CBSE) வரையறை செய்துள்ள வயது வரம்பு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று, அதை மாற்ற முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.