Published on 06/03/2019 | Edited on 06/03/2019
எதிர்வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணிக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி நடந்த நிலையில் அதில் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனையடுத்து இன்று டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகுதிப்பங்கீடுகள் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 10 தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நடத்திய ஆலோசனையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.