Published on 11/12/2019 | Edited on 11/12/2019
27 பிப்ரவரி 2002 அன்று காலை குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீவைக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தனியாக நானாவதி-மேத்தா கமிஷன் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதுகுறித்த விசாரணை அறிக்கையை நானாவதி-மேத்தா குஜராத் சட்டசபையில் சமர்ப்பித்தது. இதில், "கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை; அப்போதைய குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசுக்கும், கலவரத்திற்கும் தொடர்பில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.