Skip to main content

‘இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்துள்ளது’-மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

Published on 24/02/2025 | Edited on 24/02/2025
'Something happened in the interim period in the Rajendra Balaji case' - Supreme Court adjourns the appeal case!

தமிழ்நாடு பால்வளத்துறையின் ஆவின் நிறுவனத்தில்  வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதனை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

ராஜேந்திர பாலாஜி தரப்பில் ‘இந்த வழக்கில்  விசாரணை முடிந்து விட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன் சிபி்ஐ வசம் வழக்கை உயர்நீதிமன்றம் ஒப்படைத்து விட்டது' என்ற வாதத்தை முன்வைத்தனர். அப்போது நீதிபதிகள்  ‘இந்த விவகாரத்தில் இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு விஷயம் நடந்துள்ளது, அதை அறிய விரும்புகிறோம்.  அதனால்தான் வழக்கு சி.பிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே,  இந்த விவகாரம் தொடர்பாக முதலில் தமிழ்நாடு அரசு தரப்பிடம் சில கேள்விகளை முன் வைக்க வேண்டியுள்ளது. அதனால், ராஜேந்திர பாலாஜி தரப்பு இந்த மனுவை தமிழ்நாடு அரசு வழக்கறிஞரிடம் கொடுக்க வேண்டும்.  அவர் ஆஜராகும் போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்த பின்னர் அடுத்தகட்ட விசாரணையை நடத்தலாம். எனவே வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்’ எனத் தெரிவித்தனர்.

இவ்வழக்கின் விசாரணை வரும் வெள்ளிக் கிழமைக்கு (28-2-2025) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்