
இன்றைய பஞ்சாங்கம்
25-02-2025, மாசி 13, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 12.48 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.31 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் மாலை 06.31 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிபலன் - 25.02.2025
மேஷம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களுடைய பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த பொருளாதார தடைகள் விலகி லாபம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.
கடகம்
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள்.
தனுசு
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்கள் பாதியில் தடைபடலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும்.
மகரம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
கும்பம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாக உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
மீனம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.