இளம் விமானப்பணிப்பெண் மர்ம சாவு
கொல்கத்தா தனியார் விமான நிறுவனத்தின் பணிப்பெண் கொல்கத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங் நகரை சேர்தவர் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய் கிளாரா, (வயது20) தனியார் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவர் கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.