Published on 02/07/2020 | Edited on 02/07/2020
![modi quits weibo](http://image.nakkheeran.in/cdn/farfuture/lt6gdXfL2JTvN1wJYMJZ93LfTMJ9saqiNwXmdBNojCo/1593681804/sites/default/files/inline-images/gzgdzd.jpg)
சீனாவின் முன்னணி சமூக ஊடகமான வெய்போவில் இருந்து பிரதமர் மோடி வெளியேறியுள்ளார்.
சீனாவின் முன்னணி சமூக ஊடகமான வெய்போவில் கடந்த ஐந்து வருடங்களாகக் கணக்கு வைத்திருந்த பிரதமர் மோடி, எல்லைப் பிரச்சனைக்குப் பிறகான சீனச் செயலிகள் தடையைத் தொடர்ந்து அந்தத் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் தளத்தில் உறுப்பினராக இருந்த மோடி, மொத்தமாக 115 பதிவுகளை அந்தத் தளத்தில் பதிவேற்றி இருந்தார். இதில் 113 பதிவுகள் அழிக்கப்பட்டன. மீதமுள்ள இரண்டு பதிவுகளும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் இருக்கும் புகைப்படங்கள் என்பதால், சீன விதிகளின்படி அப்புகைப்படங்களை அகற்றுவது கடினம். எனவே அந்தப் புகைப்படங்கள் மட்டும் அகற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரின் கணக்கு மொத்தமாக நீக்கப்பட்டு, அந்தத் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் பிரதமர் மோடி.