குருவாயூா் கிருஷ்ணன் கோவிலில் பிரதமா் மோடி 111 கிலோ தாமரை பூ எடையுடன் துலாபாரம் நடத்தினாா்.
நாட்டின் இரண்டாவது முறையாக பிரதமா் ஆன மோடி இன்று கேரளாவில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டாா். இதற்காக அவா் நேற்று இரவு 11.50 மணிக்கு கொச்சி கடற்படை விமான தளத்துக்கு தனி விமானத்தில் வந்திறங்கினாா். அவரை கேரளா கவா்னா் சதாசிவம், மத்திய மந்திாி முரளிதரன், கேரளா தேவசம் போா்டு மந்திாி கடகம் பள்ளி சுரேந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
![g](http://image.nakkheeran.in/cdn/farfuture/nrnlo3wB7KbqilItInFDIid5yRG5MwwiX0R31FFHmy0/1559984211/sites/default/files/inline-images/guruvayur%20koil%20modi.jpg)
பின்னா் இன்று காலை 10 மணிக்கு குருவாயூா் கிருஷ்ணன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்த மோடி கோவில் ஆசாரப்படி வேட்டி அணிந்திருந்தாா். அவரை கோவில் மேல்சாந்தி பெட்டகுழி கிருஷ்ணன் நம்பூதிாி வரவேற்றாா். பின்னா் குருவாயூரப்பனை வணங்கிய மோடி அதன் பிறகு கோவிலின் முன் வைத்து துலாபாரம் கொடுத்தாா். இதற்கு 111 கிலோ எடை கொண்ட தாமரை பூ கொடுக்கப்பட்டது. இந்த தாமரை பூ அதிகாலையில் பலத்த பாதுகாப்புடன் கோவிலில் கொண்டு வரப்பட்டது.
துலாபாரத்தின் போது கோவில் நடையின் முன் கதளிபழம், பட்டு துணி, மற்றும் உருளியில் நறும் நெய்யும் வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து கணபதியை வணங்கி விட்டு உபதேவதையான பகவதியையும் வணங்கி விட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே வந்தாா்.
அதன்பிறகு குருவாயூா் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி மைதானத்தில் மோடிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டாா். அப்போது அவா், ’சகோதர சகோதாி மாரே நிங்ஙலுக்கு குருவாயூரப்பற்ற அனு கிரகம் கிட்டற்றே..’ என மலையாளத்தில் தொடங்கி பேசினாா்.
மோடி வருகையையொட்டி குருவாயூாில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் இன்று காலை உணவாக மோடி ஆப்பம், புட்டு, இட்லி, தோசையுடன் கடலை கறியும் சாம்பாரும் வைத்து சாப்பிட்டாா்.