Published on 24/10/2020 | Edited on 24/10/2020

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று ஆரம்பத்தில் டெல்லியில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இன்று புதிதாக பாலம் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார். அதில், "கரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அதில் அரசியல் இருக்கக்கூடாது. இது இந்திய மக்களுக்கான உரிமை. எனவே நாட்டு மக்கள் அனைவருக்கு அது இலவசமாக கிடைக்க வேண்டும்" என்றார்.