புதுதில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக நேற்று, முன் எப்போதும் இல்லாத அளவில் காற்றில் மாசுவின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் நகரவாசிகள் அனைவரும் மாஸ்க் அணிந்தே வெளியே செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய மாநில பாஜக அமைச்சர் காற்றுமாசுவை குறைக்க பல்வேறு அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக உபி மாநில பாஜக அமைச்சர் சனில் பராலா அதிரடி கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, " காற்று மாசுபாடு குறித்து மீண்டும் மீண்டும் விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள கரும்பு கழிவுகளை எரிப்பது இயற்கையானது. இதனை தவறு என்று கூறுவது, விவசாயிகள் மீதான தாக்குதலாகும். இதற்கு என்னிடம் நல்ல தீர்வு இருக்கிறது. காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டி தில்லி அரசாங்கம் யாகங்களை தொடர்ந்து நடந்த வேண்டும். குறிப்பாக மழைகடவுளான இந்திரனை வணங்கினால் காற்று மாசுபாடு நிச்சயம் குறையும்" என்றார்.