Published on 01/12/2023 | Edited on 01/12/2023

அண்மையாகவே திருமணம் செய்த கையோடு தேர்வு எழுதுவது அல்லது போராட்ட நிகழ்வுகளுக்கு திருமணம் முடிந்த கையோடு செல்வது என சில புதுமண தம்பதிகள் எடுக்கும் அதிரடி முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாவதும், அந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் ஆதரவுகளை பெறுவதும், எதிர்ப்புகளையும் பெறுவதும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஓடும் ரயிலில், பயணிகள் மத்தியில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிற்கு மாலையிட்டு, தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அசன்சோல் ரயிலில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.