Published on 12/02/2019 | Edited on 12/02/2019
![car](http://image.nakkheeran.in/cdn/farfuture/xSs5rxZ88ApMvUxMXVr7LU4giCl4JVvxQdiXM5-LxyM/1549982568/sites/default/files/inline-images/car_6.jpg)
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தடுப்பு மீது காங்கிரஸ் எம்.பி. கார் மோதியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மணிப்பூர் எம்.பி. தோக்சோம் மெய்ன்யாவின் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் தடுப்பில் மோதியது. திடீரென கார் தடுப்பில் மோதியதால் பாதுகாப்பு வீரர்கள் அந்த காரை சுற்றி வளைத்தனர். பின்னர், அந்த காரை பறிமுதல் செய்து பாதுகாப்பு வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.