குஜராத் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 13வது மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் கௌசிக். இவர் கட்டிடங்களில் கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், 20 மாடி கட்டிடம் ஒன்றில் வேலை செய்து வந்த அவர், 13 மாடியில் வெளிப்புறத்தில் அமர்ந்து பூச்சி வேலை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் மரக்கட்டையால் அமைக்கப்பட்டிருந்த தொட்டி போன்ற நாற்காலியில் அமர்ந்து வேலை செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத வகையில், அந்த கட்டை தொட்டி உடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரிப்பதற்குள் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்கள். மருத்துவர்கள் அவரை சோதனை செய்ததில் அவரின் கால் எலும்பு முறிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கீழே விழும்போது ஒவ்வொரு மாடியிலும் குறுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளில் அவர் மோதியதால் அவர் உயிர் பிழைத்தது தற்போது தெரிய வந்துள்ளது.