கொல்கத்தாவில் நேற்று அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக பேரணியில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட சண்டை மிகப்பெரிய கலவரமாக மாறியது. பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன, பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

அப்போது புகழ்பெற்ற தத்துவ மேதையான வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது பாஜக தான் என திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அதே நேரம் திரிணாமூல் காங்கிரஸ் தான் சிலையை உடைத்தது என பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் பாஜக விற்கு தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மம்தா பானர்ஜி மற்றும் அனைத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தங்கள் ட்விட்டர் புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.
தங்களது பழைய புகைப்படங்களை எடுத்துவிட்டு சமூக சீர்திருத்தவாதி வித்யாசாகர் புகைப்படத்தை தங்களுடைய அடையாள புகைப்படமாக மாற்றியுள்ளனர். மேலுக்கும் இந்த விவகாரத்தில் பாஜக வை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.