Published on 02/05/2021 | Edited on 02/05/2021
![mamata](http://image.nakkheeran.in/cdn/farfuture/gL1w_Z9E_sV9Ucrek-aWqzn7z-_gjE8uovnICTaZtA8/1619939938/sites/default/files/inline-images/mamata_2.jpg)
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 202 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 88 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் பெரிய அளவில் முன்னிலை பெற்றிருந்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அவர் தற்போது 1,417 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.