Skip to main content

கடனை திருப்பி செலுத்த நான் தயாராக உள்ளேன்; ஆனால் அரசும், வங்கிகளும் தான்...

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

 

mal

 

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையா தான் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த தயார் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த ட்வீட்டில் அவர், இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலை, விமான நிறுவனங்களை நான் நடத்தினேன். மிக அதிகமான கச்சா எண்ணெய் விலை காரணமாக விமான நிறுவனம் நஷ்டமடைந்து. அப்படியிருந்தும் நான் வாங்கிய அசல் தொகையை கட்ட சம்மதித்தேன். ஆனால் அரசாங்கமும், வங்கிகளும் தான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யூடியூப் மூலம் மோசடி? - புகாருக்கு எதிராகத் திரண்ட மக்கள்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
People gathered against the complaint for Scammed by YouTube on covai

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சக்தி ஆனந்தன் என்பவர், தனியார் எம்.எல்.எம் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு யூடியூப் சேனலும், செயலி ஒன்றும் இயக்கி வந்துள்ளார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் ஈட்டலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், எம்.எல்.எம் நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்தால் அதற்கேற்ப நிறுவனப் பொருள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாகப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். மேலும், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 

இந்த நிலையில், இந்த யூடியூப் சேனலைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு எதிராக பா.ம.க நிர்வாகி ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று (28-01-24) இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களையும், கோவை புறவழிச் சாலையில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கூடுமாறு உரிமையாளர் சக்தி ஆனந்தன் குறுஞ்செய்தி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதன் பேரில், இன்று (29-01-24) அந்த பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அவர்கள், இந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறினர். மேலும் அவர்கள், இந்த நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாகவும், இதன் மூலம் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் அந்த பகுதிக்கு வந்து, நிறுவனத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுப்பினர்களிடம் உறுதி அளித்தார். அந்த உறுதியின் அடிப்படையில், அங்கிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story

பெரியார் பல்கலை பதிவாளர் மீது மற்றொரு குற்றச்சாட்டு; அம்பலமான விதிமீறல்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
 Registrar Thangavel who was a director of a private company; A flagrant violation

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியராக பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம்கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.

இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி வருகிறார். தாங்கள் உங்களுக்கு துணை இருக்கிறோம் என தமிழக ஆளுநரே நேரில் அவரை சந்தித்து சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அங்கு பதிவாளராக பணியாற்றி வந்த தங்கவேல் என்பவர் இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அரசு சம்பளத்தில் பணியாற்றக்கூடிய தங்கவேல் 'அப்டெக்கான் ஃபோரம்' என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தது தெரியவந்துள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் உடனடியாக அவரை பணியிடம் நீக்கம் செய்ய வேண்டும்; இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தற்போது வரை தங்கவேல் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.