Published on 14/01/2019 | Edited on 14/01/2019
![tujyft](http://image.nakkheeran.in/cdn/farfuture/XiDIPfHNkBwisSEgpeukWtJtcX_pKRnacAKAfIpbnH8/1547463266/sites/default/files/inline-images/78242-bpydgfmhtz-1515072922-in_1.jpg)
சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அங்கு சில பெண்கள் செல்ல முயற்சி செய்ததால் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், சபரிமலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சபரிமலையில் மகர விளக்கு பூஜை தொடங்குவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைக்கு சுமார் 18 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6000 போலீசார் சபரிமலை பகுதியில் காவலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், விமானம் மற்றும் கடற்படை விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார்.